வெள்ளி, 1 மே, 2020

கொரோனா பரவல் குறைந்ததா? இரண்டு பொது முடக்கத்தால் சாதித்தது என்ன?

ஏப்ரல் 9 ஆம் தேதி, இந்தியாவில் கொரோனா பரவல் வேகம்: மாநிலம் வாரியாக நிலைமை எப்படி? என்ற தலைப்பில் வெளியான சிறப்பு கட்டுரையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று வளர்ச்சி விகிதங்களை விளக்கியிருந்தோம்.
மார்ச் மாத தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டது. அதிலிருந்து, ஏப்ரல் 7ம் தேதியிலான தரவுகள் அடிப்படையில் தேசிய அளவிலும், பல்வேறு மாநிலங்கள் அளவிலும் இந்தியாவின் தொற்று  அதிவேக வளர்ச்சியை நோக்கி பயணிக்கின்றது (Exponential Growth) என்பதை    விளக்கியிருந்தோம்.
அதன்பின், இந்தியாவில் இரண்டவாது பொது முடக்கம் வரும் மே மாதம் 3-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. அதன் தளர்வுகள் குறித்த அறிவிப்பும் இன்னும் சில நாளில் மத்திய அரசு அறிவிக்கயிருக்கிறது.
இந்நிலையில், பொது முடக்கத்தின் தாக்கங்கள் என்ன? இந்த பொது முடக்க நாட்களில் கொரோனா தொற்றின் வளர்ச்சி விகிதம் என்ன?  என்பதை இந்த சிறப்புக் கட்டுரையில் காண்போம்.
இந்தியாவின் இரண்டு பொது முடக்க காலம், உலகின் மிகப்பெரிய மனித தனிமைப்படுத்தல் முயற்சியாக கருதப்படுகிறது. அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கையை நிர்வகிக்கக்கூடிய மட்டத்தில் வைக்கவும், உள்ளூர் அளவில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், வரும் காலங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கையாளும் வகையில் அரசு நிர்வாகத்தை தயார் செய்யவும் மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது .
மே- 3ம் தேதியை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கையில், இந்தியாவில் கொரோனா தொற்று பரவலில் குறிப்பிடத்தக்க மந்தநிலையை இரண்டு பொது முடக்கங்கள் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

” பொது முடக்கத்தால் கொரோனா தொற்று பரவல் கணிசமான மந்தநிலை அடைந்தது என்பதில் சந்தேகம் இருப்பதாக நான் நினைக்கவில்லை,” என்று சென்னையை கணித அறிவியல் கழகத்தில் பணிபுரியும் ஆரய்ச்சியாளர் சீதாப்ரா சின்ஹா தெரிவித்துள்ளார் .
கடந்த ஏப்ரல் 12-ம் தேதி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய சீதாப்ரா சின்ஹா, ” ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,000 க்கும் குறைவாகவே இருக்கும் என்று எங்கள் ஆய்வுகள் தெரிவிக்கிறது . இதற்கு முக்கிய காரணம் தற்போது அமலில் உள்ள பொது முடக்கம். முடக்க நிலை இல்லாதிருந்தால், இந்த எண்ணிக்கை 35,000 ஐ எட்டியிருக்கும்” என்று தெரிவித்தார். இவரின் கணிப்பு சரியாகும் வகையில், ஏப்ரல்-20 அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,465 ஆக இருந்தது.
(எடிட்டிங்: கபீர் ஃபிராக்; கிராபிக்ஸ்: மிதுன் சக்ரவர்த்தி & ரித்தேஷ் குமார்)

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில், மாநிலங்களின் பரவல் விகிதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. கேரளா போன்ற சில மாநிலங்கள், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. உலகளாவிய பாராட்டைப் பெரும் அளவுக்கு கேரளாவின் முயற்சிகள் அமைந்தன. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்கள் தொடர்ந்து எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன.


அதே நேரத்தில், குறைந்த அளவு ஆபத்தைக் கொண்டிருந்த குஜராத் போன்ற வேறு சில மாநிலங்கள் கொரோனா தொற்று பரவலின் மையமாக உருவெடுத்துள்ளன.


அடுத்த சில நாட்களில் சிக்கலான மண்டலங்களாக மாறக்கூடும் அறிகுறிகளை மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் காட்டத் தொடங்கியுள்ளன. இருப்பினும், அந்த மாநிலங்களின் தற்போதைய நிலை அபாயகரமானதாக இல்லை.