மதுரையில் தற்காலிக சந்தையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் கூட்டமாக குவிந்தனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் பொது மக்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் இருப்பது கொரோனா பரவல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, குறிப்பாக சென்னை, உட்பட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்த முழு உரடங்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. நேற்றுடன் முழு ஊரடங்கு முடிவடைந்ததையடுத்து, சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் இன்று மட்டும் 11 மணி நேர கடைதிறப்புக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில், மதுரையில் உழவர் சந்தையில் பொது மக்கள் சமூக விலகலை பின்பற்றாமல் பொருட்கள் வாங்கிச் சென்றனர். கூட்டம் கூட்டமாக சென்றது கண்போரை அதிர்ச்சியடைய வைத்தது. பின்னர் அங்கு வந்த காவல்துறை போதுமான அறிவுறுத்தல்களுடன் பொது மக்களை விதிமுறைகளை கடைபிடிக்க வைத்தனர்.
அத்திவாசிய பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்கும் என்பதால் பொது மக்கள் முண்டியடித்துக் கொண்டு செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா தாக்கத்தை கட்டுக்குள் வைக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பது முக்கியம்.
credit ns7.tv