தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்ந்துள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 59 பேரும் அடக்கம்.
அதிர்ச்சியூட்டும் கொரோனா உயிரிழப்புகள்:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று உயிரிழப்பு விவரம்:
சென்னை - 18
செங்கல்பட்டு -4
திருச்சி -6
மதுரை -4
திண்டுக்கல் - 4
திருவள்ளூர் -4
கன்னியாகுமரி - 4
சிவகங்கை -4
வேலூர் - 4
விருதுநகர் -2
கிருஷ்ணகிரி -2
தஞ்சை -2
விழுப்புரம் - 1
தேனி -1
தி.மலை -1
தூத்துக்குடி - 1
தென்காசி -1
காஞ்சிபுரம் -1
திருப்பூர் -1
கோவை - 1
புதுக்கோட்டை - 1
அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை:
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 4,743 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 97,310 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 47,912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு - பாலின வாரியான விவரம்:
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதியான 1,47,324 பேரில், 89,834 பேர் ஆண்கள், 57,467 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 16,95,365 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 41,357 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு:
சென்னையில் 1,078 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 79,662 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்:
சென்னை - 1,078, மதுரை - 450, திருவள்ளூர் - 360, விருதுநகர் - 328, செங்கல்பட்டு - 264, வேலூர் - 194, கோவை - 188, திண்டுக்கல் - 157, குமரி - 122, விழுப்புரம் - 121, காஞ்சிபுரம் - 117, திருச்சி - 117, சிவகங்கை - 113, தூத்துக்குடி - 112, தென்காசி - 103
ராமநாதபுரம் - 64, தி.மலை - 62, நெல்லை - 59, சேலம் - 58, க.குறிச்சி - 57, புதுக்கோட்டை - 56, தேனி - 53
நீலகிரி -38, திருப்பத்தூர் - 32, தஞ்சை - 29, அரியலூர் - 29, ஈரோடு - 28, திருவாரூர் - 19, ராணிப்பேட்டை - 15, நாகை - 15, கடலூர் - 14, நாமக்கல் - 14, திருப்பூர் - 12, கிருஷ்ணகிரி - 10, தர்மபுரி - 7, கரூர் - 5, பெரம்பலூர் - 1
ஜூலை மாத பாதிப்பு விவரம்:
ஜூலை 1 - 94,049
ஜூலை 2 - 98,392
ஜூலை 3 - 1,02,721
ஜூலை 4 - 1,07,001
ஜூலை 5 - 1,11,151
ஜூலை 6 - 1,14,978
ஜூலை 7- 1,18,594
ஜூலை 8 - 1,22,350
ஜூலை 9 - 1,26,581
ஜூலை 10 - 1,30,261
ஜூலை 11 - 1,34,226
ஜூலை 12 - 1,38,470
ஜூலை 13 - 1,42,798
ஜூலை 14 - 1,47,324