சாத்தான்குளத்தில் தந்தை- மகன் சிறைக்காவலில் உயிரிழந்த வழக்கில், நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட ஆதாரம் வாயிலாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் ஆசனவாயில் பகுதியில் போலீசார் தாக்கிய பின்னர், ரத்தம் சொட்ட சொட்ட இருவரையும் நீதிமன்றம் அழைத்து சென்றபோது, நீதிபதி இருவரையும் பார்த்து விசாரித்து சிறையில் அடைக்க அனுமதி வழங்கினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
➤ தொடர்ந்து ரத்தம் வழிந்த நிலையில் வந்த இருவருக்கும் சிகிச்சை அளிக்காமல் போலீசார், சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு எதற்காக வாகனத்தில் அழைத்து சென்றனர்?
➤ ரத்தம் வழிந்த நிலையில் அவதிப்பட்ட இருவரையும் கோவில்பட்டி கிளைச்சிறையில் அதிகாரிகள் எப்படி அனுமதித்தனர்?
➤ இருவரும் காய்ச்சலால் தான் உயிரிழந்ததாக சான்று வழங்கிய மருத்துவர், இருவருக்கும் ரத்தம் வழிந்தது, காயம் உள்ளிட்டவை குறித்து ஏன் குறிப்பிடவில்லை? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
➤ மேலும் இருவரையும் நீதிமன்றத்திலிருந்து கிளைச்சிறைக்கு அழைத்து செல்லும் போது தனியார் வாகனத்தை பயன்படுத்தியது ஏன்? என்ற கேள்வி வலுப்பெற்றுள்ளது.
➤ சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வாகனம் உள்ளபோது, திட்டமிட்டே தனியார் வாகனத்தை போலீசார் பயன்படுத்தி உள்ளனரா? என்பன உள்ளிட்ட 6 கேள்விகளை நியூஸ் 7 தமிழ் தனது கள ஆய்வின் மூலம் எழுப்பியுள்ளது.
#BIGBREAKING | #News7TamilExclusive
சாத்தான்குளம் கொடூரம் - நியூஸ்7தமிழின் கள ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்த பகீர் தகவல்!
ரத்தம் சொட்டச் சொட்ட சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பெனிக்ஸ்!#சாத்தான்குளம் | #PoliceBrutality | #Lockdown