வியாழன், 16 ஜூலை, 2020

9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை பெரம்பலூர், அரியலூர், மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனமும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனமும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் மாவட்டம் கீழ் அணைக்கட்டில் 7 சென்டி மீட்டர் மழையும், துவாக்குடி, மஞ்சளாறு, வந்தளை அணைக்கட்டு ஆகிய இடங்களில் தலா ஆறு சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடற்பகுதிகள், கேரளா மற்றும் லட்சத்தீவு, வடக்கு கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.