தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், ஜூலை 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி நேற்று முன் தினம் அறிவித்தார். 6-வது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் வருமானத்திற்கு கீழ் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், MASJID கள் வரும் 6 ம் தேதி முதல் அனைத்து ஊராட்சிகளிலும் திறந்து கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தமிழக அரசு விளக்கியுள்ளது.
1. அன்னதான கூடங்களில்தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகள் சுத்தமாக தோன்றினாலும் மீண்டும் ஒருமுறை கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும்.
2. பஜனை உள்ளிட்ட இறைபாடல்கள் பாட அனுமதி இல்லை. பிரசாதம் ,தீர்த்தம் வழங்க அனுமதி இல்லை. தேங்காய் ,பூ,பழங்கள் போன்றவற்றை வழங்க கூடாது.
3. பிரசாதம் வாங்கினாலும் அங்கேயே உட்கார்ந்து சாப்பிட அனுமதி கிடையாது
4. வழிபாட்டுதலங்களுக்கு வருபவர் 6 அடி தள்ளி நின்று சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். எந்தவித அறிகுறியும் இல்லாதவர்களை மட்டுமேவழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்க வேண்டும்.
5. அனுமதிக்கப்பட்ட சிறிய வழிபாட்டு தலங்களின் நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். வழிபாட்டு தலங்களுக்கு வருவோர் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணிந்திருந்தால் மட்டுமே வழிபாட்டு தலங்களுக்குள்அனுமதிக்க வேண்டும்.