வியாழன், 16 ஜூலை, 2020

கொரோனா குணமடைந்தவருக்கு ஏற்படும் நீண்டகால பாதிப்புகள்: மத்திய அரசு ஆலோசனை

கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த  நோயாளிகளுக்கு ஏற்படும் நீண்டகால பாதிப்புகள் குறித்து  மருத்துவர்கள் காவல் தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக ஒரு ஆலோசனை செயல்முறையை மத்திய அரசு தொடங்கியது. நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில் இதுகுறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

திங்களன்று,எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில்,” தீவிர நோய்த் தாக்குதலில் இருந்து குணமடைந்த கொரோனா நோயாளிகளின் நுரையீரல் தொடர்ந்து “மோசமான நிலையில்” இருப்பதாகவும்,  சில சந்தர்ப்பங்களில் நோயாளிகளின் நரம்பு மண்டலத்தின் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்ந்து நீடிப்பதாகவும்” தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் நாட்டின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான டாக்டர் குலேரியா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “ குணமடைந்து வீடு திரும்பிய சில நோயாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகும் நுரையீரல் மோசமான நிலையில் இருப்பதை சி.டி.ஸ்கேன் காட்டுகிறது. அத்தகைய நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன? என்பது குறித்து   எய்ம்ஸ் குழு ஆய்வு செய்து வருவதாக” டாக்டர் குலேரியா கூறினார்.