புதன், 30 செப்டம்பர், 2020

”போரும் இல்லை, அமைதியும் இல்லை”- இந்திய விமானப்படை தளபதி பதாரியா!

 எல்லையில் எந்த சம்பவம் நடந்தாலும், அதனை எதிர்கொள்ள இந்திய பாதுகாப்பு படையினர் தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார். கல்வான் மோதலையடுத்து இந்தியா- சீனா இடையே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. சீன ராணுவத்தினர் அவ்வப்போது எல்லையில் அத்துமீறி வருகின்றனர். இதனால் இந்திய ராணுவத்தினர் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில்...

நாடு முழுவதும் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

 தமிழகத்தில் கலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தும் திட்டமில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்துடன் சேர்த்து அசாம், கேரளா, மேற்வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற தெகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தற்போதைக்கு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளளது. மாநிலங்கள் தற்போதைக்கு தேர்தல் நடத்துவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதைடுத்து,...

அரசுப் பள்ளிகளில் 16 லட்சத்தைக் கடந்த மாணவா் சோ்க்கை : பள்ளிக்கல்வித்துறை தகவல்!

நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை...

இந்தியாவில் பணிகளை நிறுத்திய அம்னெஷ்டி சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு!

 மனித உரிமை தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் அம்னெஷ்டி இண்டர்நேஷன் அமைப்பு இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனி கவனம் செலுத்தி வரும் ஒரு அரசு சாரா அமைப்பாக அம்னெஷ்டி இண்டர்நேஷ்னல் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் தனது கிளைகளை கொண்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் செயல்பட்டு வரும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு...

அக். 31 வரை தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் எவை?

 தமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட வழிமுறைகளில் , ” பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் அக்டோபர் 31 வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது. அக்டோபர் 1 முதல் 10 – 12 வகுப்பு மாணவர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கும் அரசாணை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும், திரையரங்கு, நீச்சல்குளம், சுற்றுலாத்தளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்ற பொதுமக்கள்...

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு சோனியா வேண்டுகோள்!

 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன....

வேளாண் மசோதாக்கள் : வீடியோவில் இருப்பது வேறு; துணைத் தலைவர் கூறியது வேறு!

 Manoj C GMP Siva was in seat but order key for division: Rajya Sabha Deputy Chairman Harivansh : மாநிலங்களவை தொலைக்காட்சி காணொளியில் இரண்டு எம்.பிக்களும் தங்களின் இருக்கையில் அமர்ந்திருப்பதை செய்தியாக வெளியிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ். இதற்கு பதில் அளித்த அவை துணைத்தலைவர்,ஹரிவன்ஷ் ”திமுக உறுப்பினர் திருச்சி சிவா,  அவருடைய இருக்கையில் தான் அமர்ந்திருந்தார். அது உண்மை தான். மேலும் அவர் வேளாண் மசோதாவில் பகுதிவாரி வாக்கெடுப்பினை கோரினார். ஆனால்...

இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு

 Tamil Nadu daily coronavirus report: தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,86,397 ஆக அதிகரித்துள்ளது.உயிரிழப்பு விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 29, அரசு மருத்துவமனைகளில் 41 என...

திங்கள், 28 செப்டம்பர், 2020

வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகள் அடிப்படையில் என்.டி.பி.எஸ். சட்டத்தின் கீழ் ஒருவர் மீது வழக்கு போட முடியா?

 Can a person be booked under NDPS Act based on WhatsApp messages :  ரியா சக்ரோபர்த்தியின் வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் படி போதைப்பொருள் தடுப்புப்பிரிவு ஆணையம் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரதா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.நார்கோடிக் மருந்துகள் மற்றும் உளச்சார்புள்ள பொருட்கள் சட்டம், 1985 (Narcotic Drugs and Psychotropic Substances Act (NDPS)...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்!

 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் நேற்று ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதே சமயம் மாநிலங்களவையில் வேளாண் மசதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட போது திமுக உள்ளிட்ட...

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!

 வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால்...

வேளாண் சட்டம்: டிராக்டரை தீயிட்டு கொளுத்திய போராட்டக்காரர்கள்!

 வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் டிராக்டரை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிர்த்து பலரும் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து வேளாண் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. இதனையடுத்து...

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

ஆன் -லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட சிறுவன்!

செல்போனில் பப்ஜி கேம் விளையாடியதையும், ஆன் -லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததையும் பெற்றோர் கண்டித்ததால் 14 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கருமன்கூடல் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார். இவரது மனைவி கீதா. ராஜகுமார் சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார் இந்த தம்பதிக்கு சஜன் என்ற 14 வயது...

அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு... போராட்டம் நடத்தப் போவதாக பேராசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு!

 அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மனித சங்கிலி போராட்டம் நடத்தப் போவதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து தற்போது உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்...

திருச்சி அருகே பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றி அவமதிப்பு; போலீஸ் விசாரணை

 திருச்சி அருகே இனாம்குளத்தூர் கிராமம் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது சமூக விரோதிகள் காவி சாயம் ஊற்றி அவமதித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் கிராமம், சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது நேற்று (செப்டம்பர் 26) நள்ளிரவில் அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் காவி சாயம் ஊற்றியும் காலணி வீசியும் அவமதிப்பு செய்துள்ளனர். பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்தும் இந்த செயலில் ஈடுபட்ட...

அக்டோபர் மாத ரேஷன் பொருட்கள் பெறுவதற்கு நாளை முதல் ‘டோக்கன்’

 அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருள்களை ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற, நாள் ஒன்றுக்கு 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் சஜ்ஜன்சிங்ரா சவான் தெரிவித்துள்ளார்.இந்த ஏற்பாட்டின்படி ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்கும் நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளடக்கிய டோக்கன்கள் வருகிற 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வழங்கப்படும். இதனை,...

இந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்!

 பீகார் தேர்தலுக்கான தேதிகளை நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் 1 மக்களவை தொகுதிக்கான தேர்தல் மற்றும் 14 மாநிலங்களில் இருக்கும் 64 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்க மறுத்துவிட்டது. அடுத்த மே மாதம் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருப்பதால் மாநில அரசுகளின் வேண்டுகோள்களுக்கு இணங்க இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இடைத்தேர்தல்கள்...

கொரோனா பாதிப்பு: மிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா?

 கடந்த மூன்று நாட்களில் 18,000 க்கும் மேற்பட்ட புதிய  பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், கேரளா தற்போது கொரோனா தொற்றில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக உருவெடுத்துள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கேரளா குறைந்த நோயாளிகளை கொண்டுள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும், கடந்த இரண்டு வாரங்களில், நோய்த் தொற்று கண்டறியப்பட்ட விகிதத்தை...

சனி, 26 செப்டம்பர், 2020

மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!

மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அத்தியவசிய பொருட்கள் சட்டம் மற்றும்  வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் கைது செய்து உடனடியாக...

பீகார் சட்டப்பேரவை தேர்தல் : 3 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

 பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேர்தலில் நடைபெறு என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.பீகாரில் சட்டசபை பதவிக்காலம் நவம்பர் 29-ந் தேதி முடிவடைவதால் பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது.3 கட்டங்களாக பீகார் சட்டசபை தேர்தல்...

விடைபெறும் தென்மேற்கு பருவமழை : கொங்கு வெதர்மென் சிறப்பு அறிக்கை

 தென்மேற்கு பருவக்காற்று இந்திய நிலப்பரப்பில் இருந்து 23ம் தேதியில் இருந்து நீங்க துவங்கியுள்ளது என்று கொங்குவெதர்மென் சந்தோஷ் அறிவித்துள்ளார்.  தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக பெய்த கன மழையால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் அணைகள் அனைத்தும் முழுமையாக நிரம்பியுள்ளது. முழுக் கொள்ளளவை எட்டியதால் கோவையின் சோலையாறு, ஆழியாறு அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.விடைபெறும் தென்மேற்கு பருவமழைஜூலை மாதத்தில் துவங்கிய...

மன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாத சூழலை இந்தியா உணருகிறது

 Former Prime Minister Manmohan Singh 88 Birthday Rahul Gandhi took twitter to wish him : இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் 88வது பிறந்த தினம் இன்று. அவருடைய பிறந்த தினத்தை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மன்மோகன் சிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியுள்ளார்.அதில் மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை...

கோரிக்கை நிறைவேறியிருந்தால் மகிழ்ந்திருப்பேன்: ”டைம்” பட்டியலில் இடம் பெற்ற பில்கிஸ்!

 Featured on TIME’s list, Bilkis says would have been happier if demand was met :  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஷாஹீன்பாகில் பெண்களை இணைத்து போராட்டம் நடத்திய பில்கிஸ், டைம் பத்திரிக்கையின், உலகின் சக்திவாய்ந்த 100 நபர்களின் பட்டியலில் இடம் பெற்றார். இந்த பட்டியலில் இடம் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் எங்களின் வேண்டுகோள்கள் நிறைவேறியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.82 வயதான பில்கிஸ் தன்னுடைய நண்பர்கள்...

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு தழுவிய முழு அடைப்பு!

 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று நாடு தழுவிய முழு அடைப்புக்கு தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டத்தை தொடர்ந்து, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த மசோதாக்களுக்கு குடியரசுத்...

ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கில் திமிங்கலங்கள் இறக்க காரணம் என்ன?

 Explained: Why have hundreds of whales died in Australia? : திங்கள் கிழமையில் இருந்து 450க்கும் மேற்பட்ட லாங் ஃபின்னெட் பைலட் திமிங்கலங்கள் ஆஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் அதிக அளவு திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிகழ்வாக இது காணப்படுகிறது. இவைகள் கூட்டம் கூட்டமாக தனித்துவிடப்பட்ட தஸ்மானியாவின் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கியது.இந்த திமிங்கலங்கள் கரை ஒதுங்க காரணம் என்ன?தனியாகவோ, குழுவாகவோ திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதை வழக்கமாக...