கோவிட் -19 ஐ விரைவாக கண்டறிய மார்பு பகுதி எம்க்ஸ்ரே-க்கள் உதவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்களுடைய கண்டுபிடிப்புகள் கதிரியக்கவியல்: கார்டியோதோரசிக் இமேஜிங் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன.
நியூ ஆர்லியன்ஸில் உள்ள லூஸியான மகாண பல்கலைக்கழக சுகாதார அறிவியல் மையத்தில் உள்ள ரேடியோலாஜிஸ்ட்கள் (கதிரியக்கவியலாளர்கள்) கோவிட் -19ஐ கண்டறிவதற்காக கிட்டத்தட்ட 400 நபர்களைப் கொண்டு ஒரு ஆய்வு நடத்தினர். நோயாளிகளின் மார்பு பகுதியை எக்ஸ்ரே எடுத்ததோடு ஒரே நேரத்தில் ஆர்டி-பிசிஆர் வைரஸ் பரிசோதனைகளையும் மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.
கோவிட் -19 இமேஜிங் வடிவங்களைப் பயன்படுத்தி, அவர்கள் ஒவ்வொரு மார்பு பகுதி எக்ஸ்ரேவையும் கோவிட்-19 க்கான தோற்றத்தில் தன்மை அளவில் குறிப்பிடப்படாத அல்லது தொற்று இல்லாதவைகள் என வகைப்படுத்தினர்.
கதிரியக்க வல்லுநர்கள் ஒரு சிறப்பான மார்பு பகுதி எக்ஸ்ரேவின் தோற்றத்தை மிகவும் குறிப்பிட்டனர். அவைகள் தொற்றுநோய் அமைப்பில், SARS-CoV-2 நோய்த்தொற்றுக்கு 83.3 சதவீத அதிக பாஸிட்டிவ் முன்கணிப்பு மதிப்பு உள்ளதை குறிப்பிட்டனர்.
credit
https://tamil.indianexpress.com/explained/new-research-radiologists-show-how-chest-x-rays-can-predict-covid-19-220050/