புதன், 9 செப்டம்பர், 2020

கொரோனா தொற்று எண்ணிக்கை: உலகில் 2-வது இடத்தை எட்டிய இந்தியா

 அதிக அளவிலான கொரோனா பாதிப்பை கண்டு வரும் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது.   இந்தியாவில் 41.13 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு  நோய்த் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 40.41 லட்சம் பாதிப்பு  எண்ணிக்கையுடன் பிரேசில் மூன்றாவது இடத்திலும், 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

 

சனிக்கிழமையன்று பிரேசிலின் கொரோனா பாதிப்பை முந்தும் அதே வேளையில்,  தினசரி பாதிப்பு எண்ணிகையிலும் இந்தியா மிகப்பெரிய உயர்வை தொட்டது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத வகையில், புதிதாக 90,633 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி கண்டரியப்பட்டது.  கொரோனாவை பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து, 75,000 க்கும்  அதிகமான தினசரி பாதிப்பை எந்த நாடும் உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

பிரேசில், கடந்த சில வாரங்களாக, வழக்கமான பாதிப்புகளை விட பாதிக்கும் குறைந்த அளவிலான எண்ணிகையை உறுதி செய்து வருகிறது. சில நாட்களில், அதன் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20,000 க்கும் கீழாக  குறைந்தது. அமெரிக்காவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தற்போது 40,000 – 50,000 என்ற எண்ணிக்கையில் உள்ளது. அதாவது, வரும் வாரங்களில் கொரோனா பாதிப்பில் இந்தியா அமெரிக்காவை  முந்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினசரி பாதிப்பு: இந்தியா vs பிரேசில் 

இந்தியா தினசரி பாதிப்பு விளக்கப்படம்

 

பிரேசில் தினசரி பாதிப்பு விளக்கப்படும்

 

இந்தியா சில காலமாக அதிக எண்ணிக்கையிலான தினசரி பாதிப்புகளை பதிவு செய்து வரும் நிலையில், கடந்த 11 நாட்களாக தினசரி புதிய தொற்றின் எண்ணிக்கை இமாலய இலக்கை எட்டியது. கொரோனா பரிசோதனை எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

கடந்த இரு தினங்களாக ஒரு நாளைக்கு 11.70 லட்சம் பரிசோதனைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடெங்கிலும் தற்போது 1647 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆகஸ்ட் தொடக்கத்தில், நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 4 முதல் 5 லட்சம் என்ற எண்ணிக்கையில் தான் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன.  முதன்முறையாக ஆகஸ்ட் மாத இறுதியில் ஒரே நாளில் 10.5 லட்சம்  மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டது. அன்றிலிருந்து, தினமும் 10 லட்சம் சாம்பிள்களுக்கு மேல் பரிசோதனையை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவைத் தவிர, வேறு எங்கும் தினசரி பரிசோதனை எண்ணிக்கை இந்த அளவில் இல்லை.  சமீபத்திய நிலவரப்படி, இந்தியாவில் ஒரு மில்லியன் பேருக்கு 30,044 பேர் என்ற அளவுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளன

கீழே உள்ள விளக்கப்படம், கொரோனா  பரிசோதனைக்கும், நோய்த் தொற்று பாதிப்புக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை விளக்குகிறது. மருத்துவப் பரிசோதனைகள் அதிகரிக்க, கொரோனா உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஏனென்றால், சோதனைகள் மூலம் கண்டறியப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இருப்பினும், கடந்த சில வாரங்களாக பாதிப்புக்கும்- பரிசோதனைக்கும் உள்ள இடைவேளை அதிகரித்து வருகிறது. கொரோனா  தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின்  விகிதம் (falling positivity rate.) குறைவது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் (positivity rate) சமூக பரவலைக் குறிக்கிறது. சமூகத்தில் ஒரு கொரோனா பாதிப்பை உறுதி செய்ய எத்தனை மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன என்பதை பொருத்து விகிதம் அமைகிறது. தர்போது விகிதம் குறைந்து வருவதால், ஒரு கொரோனா பாதிப்பை உறுதி செய்ய முன்பை விட இந்தியாவுக்கு கூடுதல் சோதனை தேவைப்படுகின்றன என்று எடுத்துக் கொள்ளலாம்

கொரோனா பெருந்தொற்று சமூகத்தில் பெரும்பாலானோருக்கு பரவியுள்ளதால், சார்ஸ்- கோவ் 2  தொற்றினால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு உள்ளவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கும். இதன் விளைவாக, உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் குறைகிறது.

பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதைத் தாண்டி, கடந்த சில நாட்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பொதுவாக, இரண்டு (அல்லது)  மூன்று வாரங்களுக்கு முன்பு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது உயிரிழந்து வருகின்றனர். இதனால், வரும் நாட்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது. தற்போது, ​ஒவ்வொரு நாளும் 1,000 க்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர்.   இதுவரை, கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,000 ஐ தாண்டியுள்ளது, இது உலகின் மூன்றாவது அதிக இறப்பு எண்ணிக்கை. அமெரிக்கா 23 நாட்களில் 50,000 இறப்பைப் பதிவு செய்தது. பிரேசில் 95 நாட்களிலும், மெக்சிகோ 141 நாட்களிலும் இந்த எண்ணிக்கையை எட்டிப் பிடித்தன. இந்த எண்ணிக்கையை இந்திய தேசிய அளவில் அடைய 156 நாட்கள் ஆனது. சமீபத்திய நிலவரப்படி இந்தியாவின்  இறப்பு விகிதம் 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

credit : https://tamil.indianexpress.com/explained/india-covid-19-data-tracker-covid-19-death-rate-positivity-rate-daily-new-infections-219703/