வியாழன், 24 மார்ச், 2016

தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது ?


முஜாஹித் சிக்கி's photo.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் வெடி மருந்து பதுக்கி வைத்ததாகக் கூறி கிச்சான் புகாரி, தாசீம் , சாகுல் , பிலால் , சையத் அலி உட்பட சுமார் 19 பேரை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது இதில் கிச்சான் புகாரி தவிர அனைவரும் ஜாமீன் பெற்று வெளியே வந்து சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதி மன்றத்தில் வழக்குகாக மாதம் இருமுறை வந்து செல்கிறார்கள். ...
இந்நிலையில் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு என கூறி 1.1/2 ஆண்டுகளாக சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை யடைந்த சையது அலி மற்றும் ஜான் ஆசீர் ஆகியோரை பெங்களூர் காவல் துறை நேற்று கைது செய்து பெங்களூருக்கு அழைத்து சென்றுள்ளனர். ...
தமிழக காவல்துறை அனுமதி இல்லாமல் பெங்களூர் காவல் துறை இவர்களை கைது செய்தார்களா ?
அல்லது தமிழக காவல் துறை அனுமதியோடு இவர்களை கைது செய்தார்களா ?
இஸ்லாமிய கூட்டமைப்பு என்ன செய்கிறது. ..
இஸ்லாமிய அமைப்புகள் என்ன
செய்கிறார்கள். ...
என்ற கேள்வியை நாம் எழுப்பினால் சமூக வளைய தளங்களில் உளவு துறை சொல்லி இஸ்லாமிய கூட்டமைப்பை உடைக்கிறார்கள் என்றும் உளவு துறை சொல்லி இஸ்லாமிய அமைப்புகளை வசைப்பாடுகிறார்கள் என்றும் தொண்டர்களின் முகமூடியை பயன்படுத்தி தலைவர்களே எம்மை சாடுவார்கள் ...
என்ன செய்ய
சையத் அலி எந்த ஒரு அமைப்புகளின் தலைவர்களின் மகனும் இல்லையே ..
சமூக பிரச்சினைகளை உணர்வோடு போராடும் போர் குணம் சகோதரர். ...
எந்த அமைப்புகளைம் சார்ந்து செயல்படாதவர். ...
சமுதாய அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் சமுதாய அமைப்புகள் கூட தமிழக தேர்தல் விளையாட்டில் வேகமாக சுழன்று வரும் வேலையில் அமைதியாக பெங்களூர் காவல் துறை இரண்டு நபர்களை கைது செய்து பெங்களூர் அழைத்து சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ...
இன்ஷாஅல்லாஹ்
எந்த அமைப்பு
எந்த ஊர்
எந்த நபர்
செல்வந்தரா
ஏழையா
நமக்கு தேவையில்லை
முஸ்லிம் என்ற அடையாளமே
இந்திய தேசிய லீக் கட்சிக்கு
போதும் எங்களால் முடிந்த அளவுக்கு அல்லாஹ்வின் துணைக்கொண்டு போராடுவோம். ....
அன்புடன்
இந்திய தேசிய லீக் கட்சி