சனி, 19 மார்ச், 2016

‪#‎சுதந்திர_போராட்டத்தில்‬ ‪#‎ஹிஜாபுடன்_களமிறங்கிய‬

‪#‎சுதந்திர_போராட்டத்தில்‬ ‪#‎ஹிஜாபுடன்_களமிறங்கிய‬
#வீர_மங்கை............
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹு...
பக்கத்து வீட்டு விசயங்களை அறிய ஆர்வம்
சினிமா கூத்தாடிகளின் செய்திகளை பகிர்வதற்கு ஆர்வம்
ஹிஜாப் அனிந்து சுதந்திரத்திற்காக போராடிய
ஓர் விதவை அன்னையை பற்றிய ஆர்வமா
அறிந்து கொள்ளுங்கள்
இஸ்லாமிய சகோதரிகளே
குறைந்தது இப்படி வீரப்பெண்மனி இருந்தார்களா என்பது கூட உங்களுக்கு தெரியுமா
இஸ்லாமிய ஹிஜாப் அணிந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற ஓர் வீர பெண்மணி பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காணப்போகிறோம்.
அப்பெண்மணி வேறு யாரும் இல்லை, இந்திய சுதந்திர வேங்கை வீர சகோதரான முஹம்மது அலி மற்றும் சௌகத் அலி, இவ்விரு வீரர்களை பெற்ற அன்னை தான் ஆபாதி பானு சாஹிபா என்ற "பீ அம்மா"
பிறப்பு:
இந்தியாவில் உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் என்ற ஊரில் 1857-ம் ஆண்டு செல்வாக்கு மிக்க குடும்பத்தில் தர்வேஷ் கான் என்பவருக்கு செல்வ புதல்வியாக பிறந்தார்கள். அன்றைய முஸ்லிம் பெண்களை போன்றே இவர்களால் எவ்வித கல்வி படிப்பையும் படிக்க முடியவில்லை.
திருமணமும் விதவை வாழ்வும்:
முஸ்லிம்களின் இஸ்லாமிய நெறிமுறை படி வாழ்ந்த பீ அம்மா, மற்ற பெண்மணிகளை போல் இவர்களும் அப்துல் அலி என்பவரை மணமுடித்து இல்லற வாழ்வை துவங்கினார்கள். இவர்களின் கணவர் ராம்பூர் பகுதியின் ஆங்கில அரசின் உயர் அதிகாரியாக இருந்தார்கள். அப்துல் அலி காலரா நோயினால் 1907-ம் ஆண்டு மரணம் அடைந்தார், அவர் இறக்கும் நேரத்தில் முப்பது ஆயிரம் கடன் வைத்திருந்தார். அப்போது அவருக்கு வயது முப்பது, அன்னை பீ அம்மாவிற்கு இருபத்தியேழு வயது. பீ அம்மா தனது 27-ம் வயதிலேயே தன் கணவரின் இறப்பால் விதவை ஆகினார்கள். சிறு வயதிலேயே இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் இருந்தன. கணவன் இழந்த விதவை வாழ்வு ஒரு பக்கம், சின்ன சிறு ஆறு பிள்ளைகள் மறுப்பக்கம். பீ அம்மா மனம் தளராமல் தன் கணவனின் கடனை அடைத்ததோடு குடும்ப வாழ்விலும் வெற்றி பெற்று, இந்திய வரலாற்றில் அழியாத தன் பெயரை பதித்து விட்டே சென்றார்கள். இவர்களின் வாழ்க்கை இன்று ஒவ்வொரு இஸ்லாமிய பெண்கள் அறிய வேண்டியது அவசியம். இஸ்லாமிய கலாச்சாரத்தை விட்டு கொடுக்காமல் ஹிஜாப் என்ற இஸ்லாமிய பர்தாவை அணிந்தே ஆங்கிலேயர்களுக்கு எதிராக குரல் தந்தார்கள். அன்னை அவர்களுக்கு எவ்வித கல்வியறிவு இல்லை என்றாலும் தன் பிள்ளைகளை ஆங்கிலத்திலும், உருதுவிலும் புலமை பெற்றவர்களாக ஆக்கினார்கள்.
இந்திய சுதந்திர போராளிகளில் அலி சகோதர்களான முஹம்மது அலி மற்றும் சௌகத் அலி இவ்விருவர்களை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த புதல்வர்களை பெற்றவர் தான் இந்த அன்னை.
1917-ம் ஆண்டு முதல் முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் அரசியல் மேடைகளில் மற்ற பெண்களுக்கு முன் அன்னை பீ அம்மா இஸ்லாமிய பர்தா ஹிஜாப் அணிந்து மேடையில் அமர்ந்து, மக்களுக்கு தேசப்பற்றை மூட்டினார்கள். ஒரு தடவை அன்னை பீ அம்மா அவர்கள் பஞ்சாப் பகுதியில் நடந்த ஒரு அரசியல் விழாவில் முகமூடி உள்ள ஹிஜாப் உடன் மேடையில் தோன்றி, மக்களுக்கு முன் உரையாற்றுவதற்கு முன் தன் முகமூடியை அகற்றி ஹிஜாபுடன் வீர முழக்கம் செய்தார்கள். இந்திய வரலாற்றில் ஹிஜாப் அணிந்து விடுதலை போராட்டம் செய்த இஸ்லாமிய பெண்மணிகளில் அன்னை பீ அம்மா தான் முதன்மையானவர்கள். செப்டம்பர் 1917-ம் ஆண்டு ஆங்கிலேய அரசின் பிரதிநிதிகள் மௌலானா முஹம்மது அலி அவர்களிடம் சமாதான ஒப்பந்தம் செய்ய வந்தார்கள், அதாவது உலகப்போர் நடக்கும் தருணத்தில் நாங்கள் உலகப்போரில் ஆங்கிலேய மன்னருக்கு எதிராக பங்கு கொள்ள மாட்டோம் என்ற ரீதியில் ஒப்பந்தம் இருந்தது. அப்போது அன்னை பீ அம்மா அவர்கள் திரைமறைவில் இருந்தார்கள், தன் மகனும் பிரதிநிதிகளும் பேசுவதை செவிமடுத்த அன்னை உடனே ஒரு பெண் சிங்கத்தை போன்று திரையில் இருந்து வெளிவந்து தன் மகனிடம் “நீ மட்டும் இதில் கையொப்பமிட்டால், என் முதிர்ந்த கைகள் உனக்கு எதிராக போராடும்” என கர்ஜித்தார்கள். டிசம்பர் 30, 1921-ம் ஆண்டு அஹ்மதாபாத்தில் நடந்த அகில இந்திய பெண்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு பெண்களுக்கு மத்தியில் பேசும் போது, நம் நாடு விடுதலை அடையும் வரை சந்தோசங்களும் ஆடம்பரங்களும் நம் வாழ்வில் இருக்கக்கூடாது என்ற உரையாற்றினார்கள். அந்த மாநாட்டில் அன்னை பீ அம்மா உடன் கஸ்தூரிபாய் காந்தி, சரோஜினி நாயிடு, அனுசுயா பேன், அம்ஜாதி பேகம் போன்ற பெண்மணிகள் இருந்தார்கள். கதர் ஆடைகளை அணிவதிலும், அதையே மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் பீ அம்மா விரும்பினார்கள். இவர்களின் மேடை பேச்சில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை, ஆங்கிலேயர்களை வெளியேற்றுதல், கதர் ஆடை அணிகலன்களை அணிதல் போன்ற கருத்துகளே இருந்தன.
முதல் உலகப்போரும், கிலபாத் இயக்க போராட்டமும் முடிவு பெற்ற காலம் 1924-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி அன்னை பீ அம்மா காலமானார்கள். அன்னாரின் இழப்பு அன்றைய முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. ஒரு முஸ்லிம் பெண்மணியாக இருந்து நாட்டிற்கு அன்னாரின் சேவை மறக்கமுடியாதது. மகாத்மா காந்திஜி அன்னை பீ அம்மா பற்றி சொல்லும் போது “இளவர்களின் சக்தி உள்ள முதிர்ந்த பெண்மணி, அந்நிய சர்வாதிகாரம் ஒழிந்து, சுதந்திர நாடு பெற ஓய்வு இன்றி போராடிய பெண்மணி, கையால் நூலப்பட்ட கதரே அணிந்து அதையே மக்களும் அணிய சொன்ன பெண்மணி, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு போராடிய ஓர் உன்னத பெண்மணி” என்றார்கள். மற்றொரு தேசிய தலைவர் சுவாமி சாரதா நந்த் அவர்கள் அன்னை பீ அம்மா பற்றி சொல்லும் போது “இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு உண்மையில் ஆர்வம் உள்ள நபர் இருக்கிறார்கள் என்றால் அது அன்னை பீ அம்மா தான்” என்று சொன்னார்கள்.
சகோதரிகளே அதிகம் அதிகம் பகிருங்கள் நமது சகோதரியின் தியாகத்தை பராப்புவோம்
இன்ஷாஅல்லாஹ்
அன்பாளனின் அடிமை