வியாழன், 3 ஜனவரி, 2019

கொடைக்கானலில் கடும்பனி...! 0 டிகிரியை தொட்டதால் கண்ணாடி போல் காட்சியளிக்கும் தண்ணீர்! January 03, 2019

Image

source: ns7.tv
கொடைக்கானல் பகுதியில் நிலவும் கடும் குளிர் காரணமாக, வெப்பநிலை 0 டிகிரியை எட்டியுள்ளதால், மக்களின் இயல்பு வாழக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில், இந்த ஆண்டு பனி காலம், சற்று தாமதமாகவே துவங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக உறைபனியின் தாக்கம் அதிகரித்து வந்தநிலையில், கொடைக்கானல் நட்சத்திர ஏரி, கீழ்பூமி, மற்றும் ஜிம்கானா போன்ற பகுதிகளில் வெப்ப நிலை 0 டிகிரியை எட்டியுள்ளது. இதனையடுத்து அப்பகுதி முழுவதும் வெண்ணிற கம்பளம் விரித்தது போல் அழகாக காட்சியளிக்கிறது. ஏரியைச் சுற்றி உள்ள வீடுகளில் தண்ணீர் தொட்டிகளில் வைத்துள்ள நீர் உறைந்து கண்ணாடி போல் காட்சி அளிக்கிறது. 
காலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் இதய நோயாளிகள், வெயில் வந்தவுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது எனவும்,  மக்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.