source: ns7.tv
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியானது. இந்நிலையில், திருவாரூர் தொகுதிக்கு வரும் 28ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை அடுத்து திருவாரூர் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வரும் 10ம் தேதி மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.
மனுக்களை திரும்ப பெற வரும் 14ம் தேதி கடைசி நாள். திருவாரூரில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது நாம் தமிழர் கட்சி சார்பாக சாகுல் ஹமீது போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை மறுதினம் திமுக வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்