வியாழன், 3 ஜனவரி, 2019

ரஃபேல் விவகாரம்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தியின் 4 அதிரடி கேள்விகள்! January 03, 2019

Image

source: ns7.tv

ரஃபேல் போர் விமானம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சில முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மக்களவையில் ரஃபேல் விவகாரம் தொடர்பான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் உண்மை அறியப்பட நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார். மேலும், போர் விமானக் கொள்முதல் குறித்த ஆவணங்கள் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரிடம் இருப்பதாக, கோவா அமைச்சர் ஒருவர் பேசிய ஆடியோ வெளியானது பற்றியும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அந்த ஆடியோவின் நம்பகத்தன்மைக்கு யார் உறுதியளிப்பார்கள் என்று பதில் கேள்வி கேட்டார். தொடர்ந்து ரஃபேல் விவகாரம் தொடர்பாக பல காரசார விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. 
அதிமுக எம்.பிக்கள் பிரதமர் மோடியை காப்பாற்றுகிறார்கள் எனவும் நிர்மலா சீதாராமன் அதிமுக எம்.பிக்களின் பின்னால் ஒளிந்துகொள்கிறார் எனவும் சரமாரி குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடிக்கு எதிராக முன்வைத்தார் ராகுல் காந்தி. இறுதியில், ரஃபேல் விவகாரம் தொடர்பாக தன்னுடன் 20 நிமிடங்கள் நேருக்கு நேர் விவாதம் நடத்த பிரதமர் மோடி தயாரா எனவும் கேள்வி எழுப்பினார். 
ரஃபேல் விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தேர்வை சந்திக்க நேரிடும் எனவும் அதற்கான 4 கேள்விகளை தற்போது வெளியிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேட்ட 4 கேள்விகள்:
இந்திய விமானப்படைக்கு 126 போர் விமானங்கள் தேவைப்படும் நிலையில் 36 விமானங்கள் மட்டுமே வாங்கியதற்கான காரணம் என்ன?
ஒரு விமானத்தின் விலை 560 கோடி ரூபாய் என்று சொல்வதற்கு பதிலாக 1600 கோடி ரூபாய் என்று சொல்வதற்கான காரணம் என்ன?
ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ்-க்கு பதிலாக அனில் அம்பானியை தேர்வு செய்ததற்கான காரணம் என்ன?
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ரபேல் தொடர்பான கோப்புகளை அவரது படுக்கையறையில் வைத்திருப்பதற்கான காரணம் என்ன? அதில் என்ன இருக்கிறது? 
இந்த 4 கேள்விகள் உள்ளடங்கிய ட்வீட், தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
source: ns7.tv

Related Posts: