source: ns7.tv
திருவாரூர் இடைத்தேர்தலுக்கு எதிரான வழக்கை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையடுத்து, ஜனவரி 28-ம் தேதி அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், திருவாரூரில் இடைத்தேர்தலை தள்ளி வைக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
திருவாரூர் பகுதியில் கஜா புயல் நிவாரணப் பணிகள், இன்னும் முடிவடையாததால், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும், என டி.ராஜா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அவரது மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளிப் போகுமா என்ற அச்சம் உருவாகியுள்ளது.