வெள்ளி, 4 ஜனவரி, 2019

Door Delivery செய்யப்படும் எரிபொருள் - சென்னையில் புதுமை திட்டம் அமல்! January 03, 2019

source: ns7.tv


Image

தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக வீட்டு வாசலுக்கே வந்து டீசல் விற்பனை செய்யும் திட்டத்தினை இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது.
நாட்டிலேயே முதல்முறையாக வீட்டு வாசலுக்கே வந்து எரிபொருள் டெலிவரி செய்யும் திட்டத்தினை புனே நகரில் இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த மார்ச்சில் தொடங்கியது. அதே போல மற்றொரு போட்டி நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும் எரிபொருள் டெலிவரி செய்யும் திட்டத்தினை மும்பை நகரில் தொடங்கியது. இந்த திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இத்திட்டத்தினை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த எண்ணெய் நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றம.
அந்த வகையில் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக  சென்னையில் இத்திட்டத்தினை இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. 
6,000 லிட்டர் கொள்ளளவுடன், மொபைல் டிஸ்பென்சருடன் கூடிய விஷேச வடிவமைப்பு பெற்ற டிரக் ஒன்று இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் டீசல் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. பெட்ரோல் விரைவில் ஆவியாகும் தன்மை கொண்டதால் தற்போதைக்கு பெட்ரோல் இத்திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டம் அதிகளவில் டீசல் பயன்பாட்டினை கொண்டிருக்கும் தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கானது என்றும் தனி நபர் வாகனங்களுக்காக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்சமாக 200 லிட்டர்கள் முதல் ஆர்டர் கொடுக்கலாம், 2,500 லிட்டர்களுக்கு மேல் ஆர்டர் கொடுப்பவர்கள், எரிபொருளை பாதுகாப்பாக சேமிக்கும் வசதிக்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். Repose என்ற விஷேச mobile app மூலம் இந்த ஆர்டர்களை கொடுக்கலாம் எனவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

Related Posts: