வெள்ளி, 4 ஜனவரி, 2019

அயோத்தி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை January 04, 2019

source ns7.tv

Image

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அயோத்தியின் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோஹி அகாரா, சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட 3 அமைப்புகள் பிரித்துக் கொள்ளுமாறு கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
இந்த மனுக்கள் கடந்த அக்டோபர் 29ம் தேதி விசாரணைக்கு வந்த போது,  அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு உச்சநீதிமன்றம்  ஒத்திவைத்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி கவுல் அடங்கிய அமர்வு முன் மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன. 
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகே அயோத்தி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.