source: ns7.tv
சிப் இல்லாத ஏ.டி.எம். கார்டுகளை இனி பயன்படுத்த முடியாது என்பதால், அதனை வைத்து ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கவோ, கடைகளில் பொருட்கள் வாங்கவோ முடியாமல் வாடிக்கையாளர்கள் சிலர் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
மோசடியை தடுக்க பழைய முறையிலான ஏ.டி.எம். கார்டுகளுக்கு பதிலாக, ‘சிப்’ வைக்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க, அனைத்து வங்கிகளுக்கும், கடந்த 2015-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
தொடர்ந்து ‘சிப்’ வைக்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள், 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் செயல்படாது, என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று முதல் சிப் இல்லாத டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. எனினும், புதிய கார்டுகளுக்கு மாறாமல், பழைய கார்டுகளையே பயன்படுத்தி வந்த சில வாடிக்கையாளர்கள் இதனால், பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் ஏ.டி.எம் கார்டில் சிப் இல்லாத வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கியை தொடர்புக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.