source ns7.tv
சாதியின் பெயரால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டி, ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் உரிமை மீட்பு இயக்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தமிழ் கலாசாரத்துக்கு சம்பந்தமில்லாத ஜல்லிகட்டுக்காக அமைக்கப்படும் கமிட்டிகளில், அனைத்து சமூகத்தினரும் இடம்பெறச் செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
நாயக்கர் மன்னர்களின் காலத்தில் உருவான ஜல்லிக்கட்டு தமிழ் மக்களின் விளையாட்டு என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும், அரசின் துணையுடன் சாதி ஆதிக்க விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாறியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டிற்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு அரியரூலில் ஜனவரி 1ம் தேதி தொடங்கிவிட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டபிறகு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிகக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.