source ns7.tv
ஓசூர் பகுதியில் வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்து, கடுங்குளிர் நிலவுகிறது. குட்டி இங்கிலாந்து என அழைக்கப்படும் ஓசூரில் கடந்த சில தினங்களாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
காலை 8 மணியை கடந்தும், மூடுபனி வெண்திரை போன்று காணப்படுவதால், வாகன ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றனர். குளிரை தாங்கும் கம்பளி உடைகளை அணிந்து, மக்கள் தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர் சுற்று பகுதிகள் நவம்பர்,டிசம்பர்,ஜனவரி ஆகிய மாதங்களில் குளிர்க்காலமாக பனிப்பொழிவு காணப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களாகவே முன்பு இல்லாத வகையில் குளிரின் அளவு அதிகரித்து வருகிறது. இன்று காலை முதல் பனியின் அளவு அதிகரித்து எதிரில் இருப்பவர் யார் என தெரியாத அளவிற்கு பனி வெள்ளை போர்த்தியது போல் காணப்படுவதால்.வாகன ஓட்டிகள், வேலைக்கு செல்வோர், பள்ளி,கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் குளிர் விட்டுவைக்கவில்லை.
காலை 8 மணிக்கு மேலும் பனியின் அளவு குறையாமல் கடும் குளிர் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஒலி எழுப்பியும், பள்ளி,கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் ஸ்வெட்டர்,தலைப்பாகை என குளிரை தாங்கும் வகையில் உடையணிந்து குளிரை தாங்காமல் அவதிப்பட்டுசெல்கின்றனர். நாளுக்குநாள் பனி மற்றும் குளிர் அளவு அதிகரித்து வருகிறது