source : ns7.tv
பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தும் விவகாரத்தில், வியாபாரிகளை அவசியம் இல்லாமல் துன்புறுத்தக்கூடாது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
50 சில்லறை பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள்
எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசாணை பற்றி தெளிவான புரிதல் இல்லாமல் அதிகாரிகள் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதாக மனுதாரர்கள் குற்றச்சாட்டினர்.
இதனையடுத்து, தடை செய்யப்பட்ட 14 பிளாஸ்டிக் தவிர மற்ற பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், வியாபாரிகளை அவசியம் இல்லாமல் துன்புறுத்த கூடாது எனவும் அறிவுறுத்தினர். இதனையடுத்து, வழக்கு விசாரணை ஜனவரி 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அரசாணையில் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பைகள், கவர்களை சில்லறையாக விற்பனை செய்து வரும் தங்கள் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி பறிமுதல் செய்வதாக குற்றச்சாட்டு.
காவ்யா பிளாஸ்டிக்ஸ் உட்பட 50 சில்லறை ப்ளாஸ்டிக் விற்பனையாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணை.
அரசாணை பற்றி தெளிவான புரிதல் இல்லாமல் அதிகாரிகள் தவறாக நடவடிக்கை எடுத்து தடை செய்யப்படாத ப்ளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதாக மனுதாரர்கள் குற்றச்சாட்டு.
தடை செய்யப்பட்ட 14 ப்ளாஸ்டிக் தவிர மற்ற பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய கூடாது என நீதிபதிகள் உத்தரவு.
அரசாணையை முழுமையாக அமல் படுத்த வேண்டும்: வியாபாரிகளை அவசியம் இல்லாமல் துன்புறுத்த கூடாது- நீதிபதிகள். வழக்கு விசாரணை மீண்டும் ஜனவரி 23 ஆம் தேதி ஒத்திவைப்பு.