திருவள்ளூர் அருகே உள்ள கிருஷ்ணதேவராயர் காலத்து ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிபூண்டி கிராமத்தில் வசித்து வரும் விஜயபாஸ்கர் தனியார் நிறுவன ஊழியராகப் பணிபுரிகிறார். இவரது மூதாதையர்கள் கிருஷ்ணதேவராயரின் அரசவையில் மருத்துவர்களாகப் பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அவர்களுக்கு கும்மிடிப்பூண்டி பகுதியில் கிருஷ்ணதேவராயர் நிலங்களை தானமாக வழங்கியதாகவும் அங்கே தங்கிய அவர்கள் சித்த மருத்துவம் செய்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் தங்கள் மூதாதையர்கள் வைத்திருந்த சித்தமருத்துவம் பற்றிய ஓலைச்சுவடிகள் தன்னிடம் இருப்பதாகவும் அதனைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஜயகுமார் கோரிக்கை வைத்துள்ளார்.
credit ns7.tv