திங்கள், 4 நவம்பர், 2019

கிடுகிடுவென உயர்ந்துள்ள வெங்காயத்தின் விலை!

Image

கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால், விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 
சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறி விற்பனைக்காக செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கோயம்பேடு சந்தையில்  1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை பெரிய வெங்காயம், 3000 ரூபாய்க்கும் மேலாக விற்பனையாகிறது. 
ஒரு கிலோ பெரிய வெங்காயம் 25 ரூபாயில் இருந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று 50 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ சின்ன வெங்காயம், தற்போது 90 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. 

credit ns7.tv