திங்கள், 4 நவம்பர், 2019

திரைத்துறையில் சிறந்தவர்கள் பலர் உள்ளார்கள்: முத்தரசன்

Image
விருது பெற நடிகர் ரஜினிகாந்த் சிறந்தவர், இருப்பினும், விருது பெற அவரை விட சிறந்தவர்கள் பலர் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 
விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்மைக்காலமாக, தகுதி - திறமை அறிந்து விருதுகள் வழங்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் பல தரப்பினர் இடையே எழுந்துள்ளதாக கூறினார். 
விருது பெற நடிகர் ரஜினிகாந்த் சிறந்தவர் என்று கூறிய அவர், திரைத்துறையில், ரஜினியை விட சிறந்தவர்கள் பலர் உள்ளார்கள் எனக் கருத்து தெரிவித்தார். எனவே உள் நோக்கத்துடன் விருது வழங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் முத்தரசன் கேட்டுக் கொண்டார்.

credit ns7.tv