காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாக காங்கிரஸ் கட்சிக் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா, வாட்ஸ் ஆப் ஹேக்கிங் தொடர்பாக அந்நிறுவனம் பல்வேறு பிரபலங்களுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளதாகவும், ப்ரியங்கா காந்திக்கும் அவ்வாறு எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமைதி காக்காமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுர்ஜிவாலா வலியுறுத்தினார். இஸ்ரோலைச் சேர்ந்த ஒரு ஒரு உளவு நிறுவனம் உலகெங்கிலும் உள்ள 1400 பிரபலங்களின் வாட்ஸ் ஆப்பை ஹேக்கிங் செய்து அதில் உள்ள தகவல்களை அதனை பெற விரும்பும் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரபுல் படேல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி உள்ளிட்ட பிரபலங்கள் பலரவது வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
credit ns7.tv