ஞாயிறு, 5 ஜூலை, 2020

நோய் எதிர்ப்பு சக்தி, உணவு செரிமானம்: இந்த தேனீரை காலையில் ட்ரை பண்ணுங்க!

அஸ்வகந்தா என்பது மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரு பண்டைய மூலிகை. தற்போதைய தொற்று நோய் காலகட்டத்தில் அரிதாக பயன்படுத்தப்படும் இந்த மூலிகை உட்பொருட்கள் பிரபலமாகிவிட்டன. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது என சந்தைப்படுத்தப்படுகிறது.

அஸ்வகந்தாவில் அடங்கியுள்ள பண்புகள் பருவகால காய்ச்சலை சரிசெய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மனம் மற்றும் உடல்ரீதியிலான ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது. எனினும் இந்த மூலிகை மருந்தை தொற்று நோய் அச்சுறுத்தல் முடிந்த பின்னரும் வருடம் முழுவதும் எடுத்துக் கொள்ளலாம்.

Immunity boosting ashwagandha tea: அஸ்வகந்தா டீ

ஒரு கரண்டி நிறைய அஸ்வகந்தா பொடியை விழுங்குவதற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தி ருசியான மூலிகை தேனீரை தயார்செய்து குடிக்கலாம். Indian Journal of Medical Research ஆய்வு இதழில் வந்துள்ள ஒரு கட்டுரையில் இந்த மூலிகைக்கு முடக்கு வாத (rheumatoid arthritis) நோய்க்கு சிகிச்சையளிக்கும் திறன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அஸ்வகந்தாவின் நன்மைகள்

* இது நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரித்து, உடலில் உள்ள anti-oxidants களை மேம்படுத்துகிறது

* இது இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது மற்றும் தசை செல்களில் இன்சுலின் உணர்திறனை (sensitivity) மேம்படுத்துகிறது.

* இது மன அழுத்த ஹார்மோனைக் குறைக்கிறது மேலும் உங்களை நிம்மதியாகவும் தளர்வாகவும் உணர செய்கிறது

* Journal Phytomedicine இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில் கவலை அளவை குறைக்கும் திறன் இந்த மூலிகைக்கு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

* இது இனப்பெருக்க ஹார்மோன்களை சமன் செய்கிறது மற்றும் கருவுறுதல் வீதத்தை மேம்படுத்துகிறது.

* இது இரும்பு சத்து நிறைந்ததாக உள்ளது மேலும் இரத்த சோகையை குறைக்கிறது.

எவ்வாறு அஸ்வகந்தா தேனீரை தயாரிப்பது

* ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

* ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி அல்லது 2 அஸ்வகந்தா வேர்களை போட்டு கொதிக்க விடவும்.

* தண்ணீர் 10 முதல் 15 நிமிடங்கள் வரை கொதிக்கட்டும்.

* வடிக்கட்டி, சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டு அதோடு சிறிது தேன் கலந்து பருகலாம்.

அஸ்வகந்தா தேனீரை ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனியை உண்ட பிறகு பருகலாம். ஏனென்றால் இது உடலில் உள்ள நச்சுக்களின் அளவை குறைத்து செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது.