ஞாயிறு, 5 ஜூலை, 2020

கல்வி தொடர்பான வெற்றிக்கு தங்கள் தந்தையே காரணம் - சர்வேயில் தகவல்

வர்களின் தந்தையர்கள் எவ்வித ஆன்லைன் உதவியையும் பெறவில்லை என்று கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் தெரிவித்துள்ளனர். மொத்த பங்கேற்பாளர்களில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கு பேர் வேறுமாதிரி தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான குழந்தைகள் பள்ளியில் பெறும் வெற்றிக்கு எவ்வாறு தங்கள் தந்தைகளே ஒருங்கிணைந்த பங்கு வகிக்கிறார்கள் என்று ஒரு புதிய கணக்கெடுப்பு நிரூபித்துள்ளது. தங்கள் கல்வி தொடர்பான வெற்றிக்கு தங்கள் தந்தையே காரணம் என 76.3 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
பிரைன்லி என்ற ஆன்லைன் கல்வி நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. அதில், 5 பேரில் ஒருவர் (21.4 சதவீதத்தினர்) அவர்கள் தந்தையின் பங்கேற்பு அண்மைகாலங்களில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் (48.6 சதவீதம்) அவர்கள் தந்தையின் பங்களிப்பு ஊரடங்கு முன்னரும் பின்னரும் ஒரே அளவில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அவர்களின் தந்தையர்கள் எவ்வித ஆன்லைன் உதவியையும் பெறவில்லை என்று கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் தெரிவித்துள்ளனர். மொத்த பங்கேற்பாளர்களில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கு பேர் வேறுமாதிரி தெரிவித்துள்ளனர். 34.1 சதவீத தந்தைமார்கள், தங்கள் குழந்தைக்கு வீட்டிலேயே பாடங்கள் சொல்லிக்கொடுக்கும்போது, தற்காலத்தின் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

பிரைன்லி போன்ற ஆன்லைன் கல்வி வழங்கும் நிறுவனங்கள், மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல அவர்களின் பெற்றோர் மத்தியிலும், பிரபலமாகியிருப்பது அதிகரித்து வருகிறது. இந்த நிலை மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று நேரடி வகுப்புகளை தொடர்ந்து கற்க ஆரம்பித்த பின்னரும் தொடரும் என்று நம்புகிறோம். தற்போது பெற்றோரும் ஆன்லைனில் கற்பதை தெரிந்துகொண்டனர். அவர்கள், தங்கள் குழந்தைகள் ஆன்லைனில் தொடர்ந்து கற்க உதவுவர் என்று பிரைன்லியின் தலைமை அதிகாரி ராஜேஷ் பைசானி தான் வெளியிட்டு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார். 2,137 பங்கேற்பாளர்கள் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.

தமிழில்: R. பிரியதர்சினி.