திங்கள், 7 செப்டம்பர், 2020

கொரோனா பரிசோதனையில் தவறான முடிவு: எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சை பேனர் வைத்த நபர்!

Image

கொரோனா தொற்று இல்லாத நபரின் வீட்டை தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என பேனர் வைத்த கோவை மாநகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பதிலுக்கு வாழ்த்து பேனர் வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை ஹோப்ஸ் காலேஜ் அடுத்த ராமானுஜம் நகர் பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் 4 பேருக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாநகராட்சி சார்பில் வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, செப்டம்பர் 2ம் தேதி நால்வருக்கும் வைரஸ் தொற்று உறுதியானதாக கூறி, வீட்டின் முன்பாக தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பேனர் வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.

Image

இதனையடுத்து குடும்ப உறுப்பினர்கள் செப்டம்பர் 4ம் தேதி தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட வைரஸ் சோதனையில் நான்கு பேருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. கொரோனா தொற்று இல்லாத தங்களுக்கு நோய் தொற்று உள்ளதாக அசிங்கப்படுத்தியதாக கூறி, கோவை மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்து பெரிய பேனர் ஒன்றை அவர்கள் தங்களது வீட்டின் வாசலிலேயே வைத்துள்ளார். 

அந்த பேனரில் அவர்களுக்கு நெகட்டிவ் முடிவு  ஆவணங்களையும் அச்சிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


Related Posts: