100 சதவீத பயணிகளை அனுமதிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், இம்மாதம் இறுதிவரை ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. மேலும் உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகளுக்கு 2 காலாண்டுகளுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், பிற மாநிலங்களைப்போல் 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், குளிர்சாதன வசதி உள்ள பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. இதனை நிறைவேற்றினால் மட்டுமே, பேருந்துகள் இயக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கைகள்:
1. தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகளுக்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான 2 காலாண்டு ( ஆறு மாதம் )சாலை வரியை பேருந்துகளை இயக்காத காலங்களுக்கு முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
2. படுக்கை வசதி உள்ள ஆம்னி பேருந்துகளுக்கு ஏற்கனவே சாலை வரி செலுத்தி இயக்காமல் உள்ள சாலை வரியை இனிவரும் காலங்களில் இயக்க அனுமதிக்க வேண்டும்.
3. ஆம்னி பேருந்துகளில் 100% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க பிற மாநிலங்களைப் போல் தமிழக அரசும் அனுமதிக்க வேண்டும்.
4. குளிர்சாதன வசதி உள்ள ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்.
5. Bank Moratorium செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களுக்கு கால அவகாசம் வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.