புதன், 13 செப்டம்பர், 2017

பாலியல் தொந்தரவு கொடுத்தவரை கொலை செய்து புதைத்த பெண்கள்! September 12, 2017

பாலியல் தொந்தரவு கொடுத்தவரை கொலை செய்து புதைத்த பெண்கள்!


34 வயது பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை இரண்டு பெண்கள் கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமுதா என்ற பெண்ணிற்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவருடைய கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தி அமுதாவை சுந்தர் என்பவர் தொடர்ந்து வற்புறுத்திவந்துள்ளார். மேலும் அமுதா செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவுகளையும் கொடுத்துள்ளார். ஆனால் அமுதாவோ சுந்தரை திருமணம் செய்ய விருப்பம் இல்லையென்றும் திவான் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சுந்தர், அமுதாவின் அண்ணி ராஜேஸ்வரியிடம் சென்று அமுதாவை திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் சுந்தர் போதை பழக்கத்திற்கும் மது பழக்கத்திற்கும் அடிமையானவர் என்பதால் அமுதாவை சுந்தருக்கு திருமணம் செய்துவைக்க மறுத்துள்ளார். ஆனால் சுந்தர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால், அமுதா சுந்தரை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார், அங்கு ஏற்கெனவே திட்டமிட்டபடி திவான் மற்றும் அவரது நண்பன் கோபி ஆகிய இருவரும் இருவரும் மறைவாக இருந்துள்ளனர். அமுதாவும் சுந்தரும் பேசிக்கொண்டு இருக்கும்போது திவானும் கோபியும் சுந்தரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். 

பின்னர் அமுதாவும், ராஜேஸ்வரியும் இணைந்து குழி தோண்டி, சுந்தரின் உடலை சிமெண்ட் போட்டு புதைத்துள்ளனர். இந்த சம்பவம் செப்டம்பர் மாதம் 3ம் தேதி நடந்துள்ளது. மகனை காணவில்லை என சுந்தரின் தாய் செப்டம்பர் 7ம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் அமுதாவையும் ராஜேஸ்வரியையும் செப்டம்பர் 9ம் கைது செய்தனர். அவர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Related Posts: