வெள்ளி, 10 நவம்பர், 2017

இந்து அமைப்புகள் எதிர்ப்பை மீறி திப்பு சுல்தானுக்கு அரசு விழா! November 10, 2017

கர்நாடகத்தில் அரசு சார்பில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதையொட்டி பெங்களூர், குல்பர்க்கா குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கர்நாடக அரசு கடந்த சில ஆண்டுகளாகத் திப்புசுல்தான் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறது. இதற்கு பாஜகவும் இந்து அமைப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். திப்புசுல்தான் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடத் தடை விதிக்கக் கோரிக் குடகு மாவட்டத்தைச்  சேர்ந்த மஞ்சு சின்னப்பா என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் இன்று அரசு சார்பில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. பாஜக,  ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால் பெங்களூர், மைசூர், குடகு, குல்பர்க்கா உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
Image

Related Posts: