சனி, 11 நவம்பர், 2017

மருத்துவக் கழிவுகளை கொட்டிச்செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வேண்டுகோள்! November 11, 2017

பரமத்தி வேலூர் சாலையோரம் மருத்துவ கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துகளை வீசி செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, அணிச்சம்பாளையம் பிரிவு சாலை அருகே விளை நிலங்களுக்கு சென்று வரும் பாதையில், கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் காலாவதியான மருந்துகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளால் தூர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். காலாவதியான மருந்துகளை வீசிச்செல்வோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Image

Related Posts: