மதுரை அருகே தீண்டாமைச் சுவரை இடிக்க ஆட்சியர் உறுதியளித்ததால் கிராமத்தை விட்டு வெளியேறிய அருந்ததியின மக்கள் திரும்பி வர முடிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சந்தையூரில் உள்ள தீண்டாமைச் சுவரை அகற்ற வலியுறுத்தி அருந்ததியின மக்கள் அப்பகுதியில் உள்ள தேன் மலையாண்டி கோயில் மலையில் குடியேறி போராட்டம் நடத்தினர்.
போராட்டக்குழுவினருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சந்தையூரில் சர்ச்சைக்குரிய சுவர் உள்ளபகுதியில் கிழக்கு, மேற்கு பகுதிகளில் 6 அடி நீளத்துக்கு சுவரை உடைப்பது என்றும், அதற்குள் உள்ள இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தருவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இதை இருதரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டதை அடுத்து சுவர் விவகாரத்தில் சுமூகத்தீர்வு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தேன்மலையாண்டி கோவில் மலையில் இருந்து கீழிறங்கவும் அருந்ததியின மக்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.