வெள்ளி, 8 நவம்பர், 2019

சென்னையை அச்சுறுத்தி கொண்டிருக்கும் காற்று மாசு!

Image
டெல்லியை தொடர்ந்து சென்னையிலும் காற்று மாசு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
தீபாவளிக்கு பிறகு தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சற்று ஓய்ந்து தற்போது பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சென்னையில் வாகன புகை உள்ளிட்ட நச்சுகள், வளிமண்டலத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் சென்னையில் 3-வது நாளாக அனுமதிக்கப்பட்ட அளவை விட, காற்றில் மாசு அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். காற்றில் உள்ள நுண்துகள்களின் அனுமதிக்கப்பட்ட அளவு 50 மைக்ரோ கிராமாக உள்ள நிலையில், சென்னையின் பல இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் மாசு நிலவுகிறது.

credit ns7.tv