வெள்ளி, 8 நவம்பர், 2019

பாபர் MASJID வழக்கின் தீர்ப்பையொட்டி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு திடீர் சுற்றறிக்கை !

Image
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், உஷார் நிலையில் இருக்குமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, அயோத்தி வழக்கை விசாரித்து முடித்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதால், அதற்கு முன்பாக தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில், தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதால், உஷார் நிலையில் இருக்குமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவுள்ளதை ஒட்டி, அயோத்தியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அம்பேத் நகர் மாவட்டத்தில் 8 தற்காலிக சிறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அமைதியை காக்க 16 ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதை கண்காணிக்க தனியாக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.