சனி, 4 ஜூலை, 2020

மாஸ்க்கின் விலை ரூ.3 லட்சம்: கொரோனா ரணகளத்திலும் குதூகலம்

Image

புனேவில், தங்கத்தலான முககவசம் அணிந்துள்ள மனிதரை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். 

மாஸ்க் அணிதல், தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்தல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் என விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. மாஸ்க் அதாவது தற்சமயம் கட்டாய தேவை பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்தவர், சங்கர் குர்காடே... சமூக வலைதளத்தில், காப்பரால் ஆன முககவசம் அணிந்திருந்த வீடியோ ஒன்றை பார்த்துள்ளார். இதனை அடுத்து அதே போன்று தங்கத்தால் முககவசம் அணிய வேண்டும் என ஆசை கொண்ட சங்கர் குர்காடே, தங்க வியாபாரி ஒருவரை அணுகி உள்ளார். அவரும் சுமார் 3 லட்ச ரூபாய் செலவில் மாஸ்க் செய்து கொடுத்துள்ளார். 

தனக்கு தங்கத்தின் மேல் எப்போது அளவில்லா பிரியம் இருப்பதாக தெரிவிக்கும் சங்கர் குர்காடே, அதன் காரணமாகவே இந்த முக கவசத்தை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த மாஸ்க் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்குமா என்பது கேள்விக்குறியே என்கின்றனர் இணையவாசிகள்.