மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசனத்தின் 93-வது திருத்தத்தை இது மீறும் செயல் என்றும், தகுதி வாய்ந்த பின்தங்கிய வகுப்பினரின் மருத்துவக்கல்விக்கு தடை ஏற்படுத்துவதாகும் எனவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
சமத்துவம் மற்றும் சமூக நீதியை பாதுகாக்கும் வகையில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் இதர பிறப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதியாக வழங்க வேண்டும் என்றும் சோனியா காந்தி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.