சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சாத்தான்குளம் வியாபாரியான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரைத்திருந்தார்.
இதை ஏற்று, இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று, உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடியிடம் இருந்து விரைவில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.