சிபிஎஸ்இ பாடக்குறைப்பில், இந்துத்துவ சனாதன கோட்பாடு திணிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ 11ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம், மதச்சார்பின்மை ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும், இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி ஆகிய பாடங்களும் நீக்கப்பட்டுள்ளதாக வைகோ குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கை மாணவர்களின் நெஞ்சத்தில் நஞ்சு கலக்கும் செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே கல்வியாளர்கள் குழுவை அமைத்து, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தி உள்ளார்.