செவ்வாய், 1 செப்டம்பர், 2020

161 நாட்களுக்குப் பிறகு சென்னையில் பஸ்கள் இயக்கம், கோவில்கள் திறப்பு

 தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் செப்டம்பர் இறுதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.பொது போக்குவரத்து வசதியான பஸ்கள் இன்று, 1ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மட்டும் இயக்கப்படுகின்றன. நீண்ட விடுமுறையில் இருந்த கண்டக்டர், டிரைவர்கள் அனைவரும், இன்று, 1ம் தேதி பணியில் இணைய உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கான பணி, சூழலை பொருத்து முடிவு செய்யப்படும்.

அதன்படி  இ-பாஸ் இன்றி மாவட்டங்களுக்குள் பயணிக்க அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. அதோடு மாவட்டங்களுக்குள்ளான பேருந்து போக்குவரத்து வசதிக்கும் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத வழிப்பாட்டு தலங்களுக்கு இருந்த தடை முழுவதும் நீக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடைகள் இரவு 8 மணி வரை இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.