உருது, கஷ்மீரி, டோக்ரி, இந்தி மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளை அலுவல் மொழிகளாக அறிவிக்க வேண்டிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வெகு நாட்களாக இந்த கோரிக்கையை காஷ்மீர் மக்கள் முன் வைத்து வந்த நிலையில் இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதனை தொடர்ந்து அங்கு பல்வேறு உயர்மட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.