வெள்ளி, 8 செப்டம்பர், 2017

டாக்டர் கிருஷ்ணசாமிக்கு மாணவி அனிதாவின் அண்ணன் வேண்டுகோள்! September 07, 2017

டாக்டர் கிருஷ்ணசாமிக்கு மாணவி அனிதாவின் அண்ணன் வேண்டுகோள்!


மாணவி அனிதாவுக்கு உதவி செய்தவர்கள் மீது அவதூறு பரப்ப வேண்டாம் என, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமிக்கு அனிதாவின் சகோதரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் குழுமூரில் அனிதாவின் சகோதரர்  மணிரத்தினம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தங்களுக்கு உதவி செய்த திமுக மாவட்டச் செயலாளர் சிவசங்கர், பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் மீது, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தேவையில்லாமல் அவதூறு பரப்பி வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

அனிதாவின் இழப்பால் ஏற்கெனவே துன்பத்தில் இருக்கும் தங்களுக்கு, கிருஷ்ணசாமியின் பேச்சு மேலும் துன்புறுத்துவதாக உள்ளது என அவர் குறிப்பிட்டார். 

Related Posts: