
இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
68 தொகுதிகள் உடைய இமாச்சல் சட்டசபைக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது.
போட்டியிட்ட 337 வேட்பாளர்களில் 19 பெண்கள். இந்தியாவின் அதிக வயது வாக்காளரான 101 வயது ஷ்யாம் சரண் நெகி, கின்னார் தொகுதியில் 11வது முறையாக வாக்களித்தார்.
இமாச்சல் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 18ம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.