தமிழக பாஜகவின் இணையத்தளத்தில் காவி உடையுடன் திருவள்ளூவர் படத்தை வெளியிட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் தாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இது குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் தமிழக பாஜக, தங்களது ட்விட்டர் பக்கத்தில் காவி உடையில் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டிருந்தது. இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து திருவள்ளுவரின் உண்மையான உடை காவிதான் என்றும், அதற்கு வெள்ளை அடித்தது திமுக தான் என்றும் பாஜகவினர் பதிலடி கொடுத்தனர். 1970ம் ஆண்டு வரை காவி உடையில் இருந்த திருவள்ளுவரை வெள்ளைக்கு மாற்றி சிறுமை முன்னாள் முதல்வர் கருணாநிதியையே சாரும் என்றும் தமிழக பாஜக மூத்த தலைவர் எஸ்.ஆர் சேகர் கூறியிருந்தார்.
credit ns7.tv