புதன், 6 நவம்பர், 2019

கூடங்குளம் அணுமின் நிலைய கணினி தகவல்களை வடகொரியா திருட முயன்றதாக அதிர்ச்சி தகவல்...!

Image
கூடங்குளம் அணுமின் நிலைய கணினி தகவல்களை திருட வடகொரியா முயன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரியாவைச் சேர்ந்த புலனாய்வு அமைப்பான ISSUE MAKRS LAB இதனைத் தெரிவித்துள்ளது. யுரேனியத்திற்குப் பதிலாக தோரியத்தைக் கொண்டு அணுசக்தியை உருவாக்குவதில் வட கொரியா ஆர்வம் காட்டி வருவதாக இந்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
தோரியத்தைக் கொண்டு அணு சக்தியை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் இருப்பதால், அந்த தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் நோக்கில், வட கொரியா இத்தகைய முயற்சிகளை கடந்த ஆண்டு முதல் மேற்கொண்டு வருவதாக அது கூறியுள்ளது. அதோடு, இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் இயக்குநர் அனில் ககோட்கர், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஏ. பரத்வாஜ் உள்ளிட்ட மூத்த அணுசக்தி விஞ்ஞானிகளின் இ-மெயில் தகவல்களை கைப்பற்றவும் வட கொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் முயன்றதாக ISSUE MAKRS LAB தெரிவித்துள்ளது.
இந்த ஆதாரங்களைக் கைப்பற்றிவிட்டால், அதன் அடிப்படையில், இந்திய அணுசக்தித் துறையில் பணிபுரிபவர்களை எளிதில் நெருங்க முடியும் என்பதற்காகவே, அவர்களது இ-மெயில் தகவல்களைத் திருட வட கொரியா ஹேக்கர்கள் முயன்றதாக தென் கொரிய உளவு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
credit ns7.tv