வேதத்தை எதிர்க்கும் போதெல்லாம் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் “ஆசிவகமும் ஐயனார் வரலாறும்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், வேத காலத்துக்கு முன்பே ஆசிவகம் பின்பற்றப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், ஆசிவகத்தை அழித்தே வேதம் வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தமிழா? திராவிடமா? என்ற சண்டை நீண்ட நாட்களாக தமிழ் நாட்டில் இருந்து வருவதாகவும், திராவிட சித்தாந்தத்தை எதிர்க்க முடியாதவர்கள் இந்த வகையான சண்டையை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டார். திராவிடத்திற்கு உரியது என்றால் தமிழருக்கு உரியது என்று தான் பொருள் எனவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்
credit ns7.tv