செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

புதிய ஒரு ரூபாய் நோட்டு வெளியாகிறது

11.02.2020







புதுடெல்லி: புதிய ஒரு ரூபாய் நோட்டு வெளியாக உள்ளது. இதுதொடர்பான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த நோட்டு 9.7 செ.மீ நீளம் மற்றும் 6.3 செ.மீ. அகலம் கொண்டதாக இருக்கும். 110 மைக்ரான் தடிமனில் இருக்கும். பல வண்ண நிறத்தில் வாட்டர் மார்க் உடன் அசோக தூண் இடம்பெற்றிருக்கும். வாய்மையே வெல்லும் என்ற வாசகம் இதில் இடம்பெறாது. 2020 என்ற ஆண்டு மற்றும் நிதியமைச்சக செயலாளர் அதானு சக்ரவர்த்தி கையெழுத்து இடம்பெற்று இருக்கும். நாட்டின் விவசாய ஆதிக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் தானியங்களின் வடிவமைப்பு மற்றும் சாகர் சாம்ராட் எண்ணெய் ஆய்வுதளம் இடம்பெற்றிருக்கும். நோட்டின் நிறம் இளஞ்சிவப்பு பச்சை நிறம் கலந்ததாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
credit dinakaran.com