ஞாயிறு, 5 ஜூலை, 2020

சுறா மீனை - தூக்கிச் செல்லும் அளவுக்கு உலகில் ஒரு பறவை இருக்கிறதா

கடற்கரை ஓரத்தில் பறவை ஒன்று சுறா மீனை கவ்விச் செல்வது போன்று வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்ஸ், உண்மையிலேயே சுறா மீனைத் தூக்கிச் செல்லும் அளவுக்கு உலகில் ஒரு பறவை இருக்கிறதா என விவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.


அமெரிக்காவின் மைர்டில் கடற்கரையில்தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. கெல்லி புர்பாஜ், என்பவர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “கழுகு? பருந்து? மைர்டில் கடற்கரையில் ஒரு சுறாவைப் பிடித்தப் பறவை” என்று கேள்விகளுடன் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சுமார் 15 லட்சம் வியூஸ் கடந்துள்ளது. பலரும் வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியில் கருத்திட்டும், தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தும் வருகிறார்கள்.

‘Tracking Sharks’ என்னும் பிரபல ட்விட்டர் கணக்கும், இந்த வீடியோவைப் பகிர்ந்து, ‘சுறா மீனை கவ்விச் செல்லும் இந்த பறவையின் பெயர் என்னவென்பது யாருக்காவது தெரியுமா?’ எனக் கேள்வி கேட்டுள்ளது.