சனி, 4 ஜூலை, 2020

ஏழு பிறவிகளை குறிக்கும் கல்திட்டு: மலை உச்சியில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு..

Image

பழனி அருகே கிமு பத்தாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ஏழு பிறவிகளை குறிக்கும் வகையிலான கல்திட்டைகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பழனி அருகே ஆயக்குடி பகுதியில் உள்ள ஆமைக்கரடு எனும் பகுதியில் கிமு 10ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கல்திட்டையை கண்டறிந்துள்ளனர். ஏற்கனவே இப்பகுதியில் சங்க காலத்தைச் சேர்ந்த ஆய்வேளிர் அரசர்களின் கல்வீடுகள் மற்றும் புறாக்கூடு வடிவிலான கல்திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன.  

இந்நிலையில், அப்பகுதியிலுள்ள பாறை ஒன்றின் மேற்புறத்தில் தேங்காய் அளவிலான கல்லை இரண்டு உருண்டைக் கற்களுக்கு நடுவில் சொருகி வைக்கப்பட்டதைப்போல் கல்திட்டையை கண்டுபிடித்துள்ளனர். சுமார் 4 அடி உயரமுள்ள இந்த உருண்டைக் கல்லில் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட கோடுகளும், பலகைக் கல்லில் ஏழு, ஏழு கட்டங்களாக மொத்தம் 49 கட்டங்களும் காணப்படுகிறது. இந்த கட்டங்கள் தமிழர்களின் எழுபிறப்பு நம்பிக்கையை குறித்திடுவதாக தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.